சேமியா வெஜ் கட்லெட்

on off off off off 2 - Poor!
1 நட்சத்திரங்கள் - 2 மதிப்பாய்வின் அடிப்படையில்

தேவையான பொருட்கள்:

சேமியா - 1/2 கப்

உருளைக்கிழங்கு (வேகவைத்து தோலுரித்து மசித்தது) - 2

பீட்ரூட் (தோல் நீக்கி துருவியது) - 1

கேரட் (தோல் நீக்கி துருவியது) - 1

பட்டாணி - 1/4 கப்

பெரிய வெங்காயம் (பொடியாக நறுக்கியது) - 1

பச்சைமிளகாய் (பொடியாக நறுக்கியது) - 3

இஞ்சி (பொடியாக நறுக்கியது) - 1 துண்டு

புதினா (பொடியாக நறுக்கியது) - ஒரு கொத்து

கொத்தமல்லி தழை (பொடியாக நறுக்கியது) - 1 மேசைக்கரண்டி

மைதா (சலித்து ஒரு கப் தண்ணீரில் கரைத்தது) - 1/2 கப்

பிரட் தூள் - 1 கப்

மிளகுத்தூள் - 1 தேக்கரண்டி

கரம் மசாலா தூள் - 1 தேக்கரண்டி

எண்ணைய் - பொரிக்க தேவையான அளவு

உப்பு - தேவையான அளவு

செய்முறை:

சேமியாவை 2 அல்லது 3 கப் தண்ணீரில் வேகவைத்து வடித்து எடுக்கவும்.

வாணலியில் 2 டீஸ்பூன் எண்ணையை காயவைத்து பொடியாக நறுக்கிய வெங்காயம்,பச்சைமிளகாய்,இஞ்சி,புதினா, மல்லித்தழை சேர்த்து 3 நிமிடம் சிம்மில் வைத்து வதக்கி பின் துருவிய கேரட், பீட்ரூட், பட்டாணியை சேர்த்து 3 நிமிடம் வதக்கி மசித்த உருளை, சேமியா, கரம் மசாலா சேர்த்து நன்கு கலந்து கிளறி இறக்கவும்.

இதை உருண்டையாக உருட்டி கையால ஒரு அமுக்கி அமுக்கி கரைத்த மைதாமாவு கலவையில் முக்கி பிரட் தூளில் இரு பக்கமும் அமுக்கி எடுக்கவும்.

வாணலியில் எண்ணைய் ஊற்றி காய்ந்ததும் இதை போட்டு இரு புறமும் பொன்னிறமாக பொரித்தெடுக்கவும்.

குறிப்புகள்: