சேமியா வடை
1 - Excellent!
5 நட்சத்திரங்கள் - 1 மதிப்பாய்வின் அடிப்படையில்
தேவையான பொருட்கள்:
சேமியா - 200 கிராம்
சின்ன வெங்காயம் - 1/4 கிலோ
பச்சைமிளகாய் - 4
இஞ்சி - சிறிதளவு
கறிவேப்பிலை - சிறிதளவு
பச்சரிசிமாவு - 25 கிராம்
எண்ணெய் - வடை பொரிக்க தேவையான அளவு
உப்பு - தேவையான அளவு
செய்முறை:
சேமியாவை 5 நிமிடம் வேக வைத்து கொள்ள வேண்டும்.
அரிசிமாவு, சிறிய வெங்காயம், பொடியாக நறுக்கிய பச்சைமிளகாய், இஞ்சி, கறிவேப்பிலை, கொத்தமல்லி. இவை அனைத்தையும் சேமியாவுடன் தேவையான அளவு உப்பு சேர்த்து பிசைந்து கொள்ள வேண்டும்.
பின் வாணலியில் எண்ணெய் ஊற்றி வடையாய் தட்டி போட்டு சுட்டு எடுத்து பரிமாறவும்.