சேமியா போண்டா

off off off off off 0

தேவையான பொருட்கள்:

சேமியா - 100 கிராம்,

அரிசி மாவு - 1 கைப்பிடி

பச்சை மிளகாய் - 4

பெரிய வெங்காயம் - 2

இஞ்சி - சிறிது

கறிவேப்பிலை - சிறிது

கொத்தமல்லி தழை - சிறிது

எண்ணெய் - பொரிக்க தேவையான அளவு

உப்பு - தேவையான அளவு

செய்முறை:

சேமியாவை வெதுவெதுப்பான தண்ணீரில் 15 நிமிடம் ஊற வைத்து தண்ணீரை வடிக்கவும்.

வெங்காயம், பச்சை மிளகாய், இஞ்சி கறிவேப்பிலை, கொத்தமல்லி தழையை பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.

அத்துடன் சேமியா, அரிசி மாவு, உப்பு சேர்த்து தேவைப்பட்டால் சிறிது தண்ணீர் தெளித்து கெட்டியாக பிசையவும்.

வாணலியில் எண்ணெய் விட்டு காய்ந்தவுடன், மாவை சிறிது சிறிதாக கிள்ளி போட்டு சிவக்க விட்டு எடுத்து பரிமாறவும்.

குறிப்புகள்: