சேமியா பக்கோடா
தேவையான பொருட்கள்:
சேமியா - 1 கப்
கடலை மாவு - 1/4 கப்
அரிசி மாவு - 1 மேசைக்கரண்டி
வேக வைத்த உருளைகிழங்கு - 1 பெரியது
பெரிய வெங்காயம் - 3
இஞ்சி, பூண்டு விழுது - 1 தேக்கரண்டி
பச்சை மிளகாய் (காரத்திற்கேற்ப) - 6
நறுக்கிய கொத்தமல்லி - 1 மேசைக்கரண்டி்டி
புதினா - விருப்பப்படி
மிளகாய்த் தூள் - 1/2 தேக்கரண்டி
எண்ணெய் - பொரிக்கத் தேவையான அளவு
உப்பு - தேவைக்கேற்ப
செய்முறை:
சிறிது நெய் பூசி சேமியாவை பொன்னிறமாக வறுக்கவும். கொதிக்கும் தண்ணீரில் வறுத்த சேமியாவை போட்டு உடனே வடிக்கவும். மேலும் கொஞ்சம் பச்சை தண்ணீரை ஊற்றி நன்றாக வடித்து விடவும்.
வெங்காயத்தையும், பச்சை மிளகாயையும் பொடியாக நறுக்கவும்.
உருளைக்கிழங்கை மசித்து, சேமியாவையும் மற்ற பொருட்களையும் சேர்த்து கலக்கவும். இதில் ஒரு டேபிள் ஸ்பூன் சூடான எண்ணெய் விட்டுக் கலக்கவும். கடாயில் எண்ணெய் வைத்து காய்ந்ததும், மாவை சிறு துண்டுகளாக போட்டு பொரித்து எடுத்து பரிமாறவும்.