சேனைக்கிழங்கு வடை (1)

off off off off off 0

தேவையான பொருட்கள்:

சேனைக்கிழங்கு - 200 கிராம்

கடலைப்பருப்பு - 1/2 கப்

உளுத்தம் பருப்பு - 1/2 கப்

பச்சை மிளகாய் - 4

சின்ன வெங்காயம் - 6

இஞ்சி - சிறிது

கறிவேப்பிலை - சிறிது

கொத்தமல்லி தழை - சிறிது

பெருங்காயம் - சிறிது

எண்ணெய் - வடை பொரிக்க தேவையான அளவு

உப்பு - தேவையான அளவு

செய்முறை:

பருப்புகளை 1/2 மணி நேரம் ஊற வைக்கவும்.

பிறகு தண்ணீரை வடித்து வடைக்கு அரைப்பது போல் கெட்டியாக, கரகரப்பாக அரைக்கவும்.

சேனைக்கிழங்கை குக்கரில் 5 விசில் விட்டு வேக வைத்து எடுக்கவும்.

தண்ணீரை வடித்து நன்கு மசிக்கவும்.

வெங்காயம், பச்சை மிளகாய், இஞ்சி கறிவேப்பிலை, கொத்தமல்லி தழையை பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.

அத்துடன் மசித்த சேனைக்கிழங்கு, அரைத்த மாவு, உப்பு சேர்த்து பிசைந்து சிறு சிறு வடைகளாகத் தட்டி எண்னெயில் தட்டிப் போட்டு சிவக்க விட்டு எடுத்து பரிமாறவும்.

குறிப்புகள்: