சேனைக்கிழங்கு வடை

off off off off off 0

தேவையான பொருட்கள்:

சேனைக்கிழங்கு - 200 கிராம்

கடலைப்பருப்பு - 1/2 கப்

உளுத்தம் பருப்பு - 1/2 கப்

பச்சை மிளகாய் - 2

பெரிய வெங்காயம் - 1

இஞ்சி - சிறிது

கறிவேப்பிலை - சிறிது

பெருங்காயம் - சிறிது

எண்ணெய் - வடை பொரிக்க தேவையான அளவு

உப்பு - தேவையான அளவு

செய்முறை:

பருப்புகளை அரைமணி நேரம் ஊற வைக்கவும். வெங்காயம், கறிவேப்பிலையை பொடியாக நறுக்கி வைக்கவும். சேனைக்கிழங்கை துண்டுகளாக நறுக்கி வைக்கவும்.

பருப்பில் உள்ள தண்ணீரை வடித்து வடைக்கு அரைப்பது போல் இஞ்சி, பச்சை மிளகாய் சேர்த்து கெட்டியாக, கரகரப்பாக அரைக்கவும்.

சேனைக்கிழங்கை குக்கரில் 5 விசில் விட்டு வேக வைத்து எடுக்கவும். தண்ணீரை வடித்து நன்கு மசிக்கவும்.

பொடியாக நறுக்கின வெங்காயம் கறிவேப்பிலையுடன் மசித்த சேனைக்கிழங்கு, அரைத்த மாவு, உப்பு சேர்த்து பிசைந்துக் கொள்ளவும்.

வாணலியில் எண்ணெய் வைத்து காய்ந்ததும் மாவை சிறு சிறு வடைகளாகத் தட்டி எண்ணெயில் போட்டு சிவக்க விட்டு எடுத்து பரிமாறவும்.

குறிப்புகள்: