சேனைக்கிழங்கு கட்லெட்

on on on off off 1 - Good!
3 நட்சத்திரங்கள் - 1 மதிப்பாய்வின் அடிப்படையில்

தேவையான பொருட்கள்:

சேனைக்கிழங்கு - 1/4 கிலோ

ரொட்டித்தூள் - 1 கப்

இஞ்சி - ஒரு சிறு துண்டு

பூண்டு - 4 பல்

மிளகாய்த்தூள் - 1/2 தேக்கரண்டி

மல்லித்தூள் - 1/2 தேக்கரண்டி

பட்டை - ஒரு சிறு துண்டு

சோம்பு - 1/2 தேக்கரண்டி

மஞ்சள்தூள் - 1/4 தேக்கரண்டி

உப்பு - தேவையான அளவு

செய்முறை:

சேனைக்கிழங்கை தோல் சீவி 2 இன்ச் நீளம், 2 இன்ச் அகலம் உள்ள சதுர துண்டுகளாக வெட்டிக்கொள்ளவும்.

வெட்டிய துண்டங்களை மஞ்சள் பொடி பாதி அளவு உப்பு சேர்த்து அரை வேக்காடாக வேக வைத்து எடுத்துக்கொள்ளவும். மசாலா சாமான்களை அரைத்துக்கொள்ளவும்.

ஒரு வாணலியில் 2 தேக்கரண்டி எண்ணெய் ஊற்றி காயவைத்து அரைத்த மசாலா, மீதி உப்பு சேர்க்கவும்.

வேக வைத்து எடுத்து வைத்திருக்கும் சேனைக்கிழங்கை போட்டு அடுப்பை சிம்மில் வைத்து நன்றாக பிரட்டி எடுக்கவும்.

இப்போது சேனைக்கிழங்கு துண்டங்களை எடுத்து ரொட்டித்தூளில் போட்டு பிரட்டி வைக்கவும்.

ஒரு வாணலியில் எண்ணெயை காய வைத்து துண்டங்களை போட்டு பொரித்து எடுத்து பரிமாறவும்.

குறிப்புகள்: