சென்னா தால் வடை

off off off off off 0

தேவையான பொருட்கள்:

வெள்ளை சென்னா (கொண்டைக்கடலை) - 200 கிராம்

காய்ந்த மிளகாய் - 1

பட்டை ‍ - ஒரு அங்குலம் சைஸ்

சோம்பு - 1 தேக்கரண்டி

இட்லி சோடா - ஒரு பின்ச்

பூண்டு - 2 ப‌ல்

சின்ன வெங்காயம் - 8

பச்சை மிளகாய் - 1

துருவிய‌ இஞ்சி - ஒரு தேக்க‌ர‌ண்டி

க‌றிவேப்பிலை - சிறிது

கொத்தம‌ல்லி இலை - சிறிது

எண்ணெய் - வடை பொரிக்க தேவையான அளவு

உப்பு - தேவையான அளவு

செய்முறை:

வெள்ளை சென்னாவை எட்டு ம‌ணி நேர‌ம் ஊற‌ வைக்க‌வும்.

ஊறவைத்த சென்னாவை நன்கு க‌ளைந்து த‌ண்ணீரை வ‌டித்து வைக்க‌வும்.

முத‌லில் சோம்பு, காய்ந்த மிள‌காய், ப‌ட்டையை திரித்து கொண்டு சென்னாவை கொஞ்சமாக‌ போட்டு பூண்டு சேர்த்து நன்கு அரைக்க‌வும்.

மீதியை போட்டு கொரகொரப்பாக அரைக்கவும்.

வெங்காய‌ம், ப‌ச்சைமிள‌காய், கொத்தம‌ல்லி, க‌றிவேப்பிலை, துருவிய‌ இஞ்சி, உப்பு, சிறிது இட்லி சோடா க‌ல‌ந்து அரைத்த‌ க‌ல‌வையுட‌ன் ந‌ன்கு க‌ல‌க்க‌வும்.

வ‌டைக‌ளாக‌ பொரித்து எடுத்து பரிமாறவும்.

குறிப்புகள்: