சுவீட் பொடேட்டோ சிப்ஸ்

off off off off off 0

தேவையான பொருட்கள்:

சர்க்கரை வள்ளிக்கிழங்கு - 1/2 கிலோ

முட்டை - 2

ரொட்டித்தூள் - 1 கோப்பை

பார்மஸான் சீஸ் - 1/2 கோப்பை

மிளகுத்தூள் - 1/2 தேக்கரண்டி

மிளகாய்தூள் - 1/2 தேக்கரண்டி

நறுக்கிய பார்ஸ்லி தழை - 1 மேசைக்கரண்டி

ஆலிவ் ஆயில் - 1/4 கோப்பை

செய்முறை:

கிழங்கை வேண்டிய அளவில் மெல்லியதான துண்டுகளாக்கவும். ஃபிரன்ச் ஃபிரைஸ் போல் இருந்தால் நல்லது.

முட்டைகளை ஒரு கோப்பையில் உடைத்து ஊற்றி ஒரு மேசைக்கரண்டி நீரைச் சேர்த்து நன்கு அடித்து வைக்கவும்.

பிறகு ஒரு ஜிப் லாக் பிளாஸ்டிக் பையில் ரொட்டிதூளையும், சீஸ்தூள் மற்றும் மிளகாய்தூள், மிளகுத்தூள் ஆகியவற்றை சேர்த்து நன்கு கலக்கவும்.

பிறகு நறுக்கியுள்ள கிழங்கின் துண்டுகளை சிறிது சிறிதாக முட்டைகலவையில் போட்டு பிரட்டி ரொட்டித்தூளில் போட்டு பிளாஸ்டிக் பேப்பரை மூடி நன்கு குலுக்கி விட்டு ஒரு தட்டில் வைக்கவும்.

இதைப் போல் எல்லாவற்றையும் செய்து பேக்கிங் செய்யும் தட்டில் சிறிது எண்ணெயை பூசி விட்டு அதில் கிழங்கு துண்டுகளைப் பரவலாகப் போடவும்.

மீதியுள்ள எண்ணெயை கிழங்கின் மீது படும் படியாக பரவலாக ஊற்றவும்.

பின்பு 450 டிகிரி Fல் சூடாக்கிய அவனில் வைத்து அரைமணி நேரம் வரை வைத்திருந்து அடிக்கடி கிளறி விடவும்.

சிப்ஸ் அனைத்தும் நன்கு பொன்னிறமானதும் வெளியில் எடுத்து பேஸில் தழையைத் தூவி விட்டு தக்காளி கெட்சப்புடன் சூடாக பரிமாறவும்.

குறிப்புகள்: