சுரைக்காய் பஜ்ஜி

off off off off off 0

தேவையான பொருட்கள்:

சுரைக்காய் (நடுத்தரமானது) - 1/2

மைதா மாவு - 1 கப்

சோள மாவு - 1/2 கப்

கெட்டியான தேங்காய்ப் பால் - 1 கப்

சோடா உப்பு - ஒரு சிட்டிகை

பெரிய வெங்காயம் - 1

பச்சை மிளகாய் - 2

துருவிய இஞ்சி - 1 தேக்கரண்டி

சூடான எண்ணெய் - 2 தேக்கரண்டி

எண்ணெய் - பொரிக்க தேவையான அளவு

உப்பு - தேவையான அளவு

செய்முறை:

சுரைக்காயைத் தோல் சீவி, விரல் நீளத் துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும். நறுக்கின துண்டங்களுடன் சோடா உப்பும், தேவையான உப்பும் சேர்த்துப் பிசறி அரை மணி நேரம் ஊற வைக்கவும்.

வெங்காயத்தை இஞ்சி, பச்சை மிளகாயுடன் சேர்த்து அரைத்து, மைதா மாவு, சோளமாவு இவற்றுடன் கலந்து, சூடான எண்ணெய்யையும் ஊற்றி, தேவையான உப்பும் சேர்த்து கெட்டியான கரைசலாக கரைத்துக் கொள்ளவும்.

அடுப்பில் வாணலியை வைத்து எண்ணெய் ஊற்றி காய விடவும். எண்ணெய் சூடானதும், சுரைக்காய் துண்டுகளைப் பிழிந்தெடுத்து, சிறிது சிறிதாக மைதா மாவு கரைசலில் தோய்த்து எடுத்து, எண்ணெய்யில் இட்டுப் பொரித்து எடுத்து பரிமாறவும்.

குறிப்புகள்: