சீடை (4)

off off off off off 0

தேவையான பொருட்கள்:

புழுங்கல் அரிசி - 2 கப்

ஜவ்வரிசி - 400 கிராம்

பொரிகடலை - 1 கப்

சீரகம் - 1 தேக்கரண்டி

துருவிய தேங்காய் - 1 கப்

தேங்காய் எண்ணெய் - பொரிக்க தேவையான அளவு

உப்பு - தேவையான அளவு

செய்முறை:

புழுங்கல் அரிசியையும், ஜவ்வரிசியையும் தனித்தனியாக சிறிது நேரம் ஊற வைத்து எடுத்து வைத்துக் கொள்ளவும்.

அரிசியை கிரைண்டரில் போட்டு மைப் போல் கட்டியாக உப்புச் சேர்த்து அரைத்துக் கொள்ளவும்.

அரைத்த மாவுடன் பொரிகடலைமாவு, துருவிய தேங்காய், சீரகம் ஆகியவற்றை எல்லாம் ஒன்றாகப் போட்டு கட்டியாகப் பிசைந்து வைத்துக் கொள்ளவும்.

மாவை சிறு சீடைகளாக உருட்டி சிறிது நேரம் உளர விடவும்.

வாணலியில் எண்ணெயை காயவைத்து எண்ணெய் காய்ந்ததும் சீடைகளை போட்டு எடுக்கவும்.

குறிப்புகள்: