சின்ன வெங்காய முறுக்கு
தேவையான பொருட்கள்:
பச்சரிசி மாவு - 2 கப்
கடலைமாவு - 1 கப்
மிளகாய்தூள் - 50 கிராம்
சின்ன வெங்காயம் - 1/4 கிலோ
எண்ணை - பொரிக்க தேவையான அளவு
உப்பு - தேவையான அளவு
செய்முறை:
முதலில் சிறிது 2 மேசைக்கரண்டி எண்ணெயை நன்கு காய்த்து வைத்துக் கொள்ளவும்.
பச்சரிசி மாவையும், கடலை மாவையும் கலந்து அதனுடன் உப்பு, மிளகாய் தூள், காய்த்து வைத்த எண்ணெய் சேர்த்து, தண்ணீர் சேர்க்காமல் நன்றாக பிசைந்து வைத்து கொள்ளவும்.
வெங்காயத்தை தோல் நீக்கி மையாக அரைத்துக் கொள்ளவும்.
முறுக்கு மாவில் அரைத்த வைத்துள்ள வெங்காய விழுதை எடுத்து போட்டு பிசைந்து கொள்ளவும்.
தேவையானால் சிறிது தண்ணீர் தெளித்து முறுக்கு மாவு பதத்திற்கு பிசைந்து கொள்ளவும்.
வாணலியில் அரை லிட்டர் எண்ணெய் ஊற்றி சூடானதும், மாவினை முறுக்கு அச்சில் போட்டு காய்ந்த எண்ணெயில் பிழிந்து பொன்நிறமாக வேகவைத்து எடுத்து பரிமாறவும்.