சிக்கன் லிவர் பஜ்ஜி
0
தேவையான பொருட்கள்:
சிக்கன் ஈரல் - 1/4 கிலோ கிராம்
மஞ்சள்த்தூள் - 1/2 தேக்கரண்டி
கடலை மாவு - 100 கிராம்
சோடா மாவு - 1 சிட்டிகை
கலர்பவுடர் - 1 சிட்டிகை
இஞ்சி பூண்டு விழுது - 1 தேக்கரண்டி
மிளகாய்த்தூள் - 1 தேக்கரண்டி
எண்ணெய் - பொரிக்க தேவையான அளவு
உப்பு - தேவையான அளவு
செய்முறை:
ஈரலுடன் மஞ்சள்த்தூள் சேர்த்து கொஞ்சம் தண்ணீர் விட்டு 10 நிமிடம் வேக வைத்து இறக்கவும். தண்ணீரய் வடித்து விட்டு ஈரலுடன் கடலை மாவு சோடா மாவு, கலர்பவுடர், இஞ்சி பூண்டு விழுது, மிளகாய்த்தூள், உப்பு தேவையான தன்னீர் ஊற்றி கொஞ்சம் திக்காக கலந்து வைக்கவும்.
வாணலியில் எண்ணெய் காய்ந்தவுடன் பஜ்ஜியில் முக்கிய ஈரலை பொரித்து எடுத்து பரிமாறவும்.