சிக்கன் பிரட் போண்டா

off off off off off 0

தேவையான பொருட்கள்:

கோழி துண்டுகள் (எலும்பில்லாதது) - 4

ப்ரட் ஸ்லைஸ் - 16

உருளைக்கிழங்கு மீடியமாக - 2

கேரட் - 1/4 பகுதி

வெங்காயம் - 2

பச்சைமிளகாய் - 3

இஞ்சி, பூண்டு விழுது - 3/4 தேக்கரண்டி

சோம்புத் தூள் - 3 தேக்கரண்டி

கரம் மசாலாத் தூள் - 1 தேக்கரண்டி

மல்லிதழை - சிறிதளவு

எண்ணெய் - பொரிக்க தேவையான அளவு

உப்பு - தேவையான அளவு

செய்முறை:

கோழி துண்டுகளை சிறிது மஞ்சள் தூள், கால் தேக்கரண்டி இஞ்சி பூண்டு விழுது சேர்த்து வேக வைத்து உதிர்த்து கொள்ளவும். அதே போல் உருளை, கேரட்டையும் வேக வைத்து நன்கு மசித்து வைத்து கொள்ளவும். வெங்காயம், பச்சைமிளகாயை பொடியாக நறுக்கி வைத்துக் கொள்ளவும்.

ஒரு வாணலியை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி சூடு வந்ததும், உதிர்த்து வைத்திருக்கும் கோழிகளை போட்டு ஒரு வதக்கு வதக்கி விட்டு நறுக்கி வைத்துள்ள வெங்காயம், பச்சைமிளகாயை சேர்த்து அரை தேக்கரண்டி உப்பும் போட்டு நன்கு வதக்கவும்.

வதங்கியதும், இஞ்சி பூண்டு விழுதை சேர்த்து ஒரு நிமிடம் வதக்கி விட்டு தூள் வகைகளையும் சேர்த்து இரண்டு நிமிடம் வதக்கவும். பிறகு மசித்து வைத்திருக்கும் உருளை, கேரட்டை சேர்த்து நன்கு ஒன்று சேர கிளறி சூடேறி ஒன்றாக கலந்ததும் உப்பு சரி பார்த்து விட்டு இறக்கி ஆற விடவும்.

ஆறியவைகளை சிறு எலுமிச்சை அளவு உருண்டைகளாக செய்துக் கொள்ளவும்.

ஒரு ப்ரட் ஸ்லைஸை எடுத்து கொண்டு ஓரங்களை லேசாக நீக்கி விட்டு தண்ணீரை எல்லா இடங்களிலும் தெளித்து விட்டு நன்கு உள்ளங்கையால் எல்லா பக்கமும் அழுத்தி விடவும். பின்பு அதன் நடுவே ஒரு உருண்டையை வைத்து பிரட்டை கொண்டு மூடி உள்ளடம் வெளியே தெரியாதவாறு உருண்டை செய்யவும். ப்ரட் ஈர பதம் இருந்தால் தான் நன்கு உருண்டை பிடிக்க முடியும்.

இப்படியே எல்லாவற்றையும் செய்து கொள்ளவும்.ஒரு பத்து நிமிடம் அப்படியே வைத்து விடவும்.

வாணலியில் எண்ணெய் ஊற்றி அடுப்பில் வைத்து சூடு வந்ததும் உருண்டைகளை இரண்டு மூன்றாக போட்டு மிதமான தீயிலேயே பொன்னிறமாக வறுத்து எடுத்து பரிமாறவும்.

குறிப்புகள்: