சிக்கன் பக்கோடா
தேவையான பொருட்கள்:
எலும்பில்லாத சிக்கன் - கால் கிலோ
மிளகாய் தூள் - ஒரு தேக்கரண்டி
மஞ்சள் தூள் - கால் தேக்கரண்டி
பஜ்ஜி மாவு (ரெடிமேட் மிக்ஸ்) - 2 மேசைக்கரண்டி
அரிசி மாவு - ஒரு தேக்கரண்டி
பொடியாக நறுக்கிய கொத்தமல்லி
கறிவேப்பிலை
எண்ணெய் - தேவைக்கு
உப்பு
எலுமிச்சை சாறு - 2 தேக்கரண்டி
செய்முறை:
சிக்கன் துண்டுகளை சிறியதாக நறுக்கி அதில் பாதி மிளகாய் தூள், உப்பு, மஞ்சள் தூள், எலுமிச்சை சாறு கலந்து ஒரு மணி நேரம் ஊற விடவும்.
பின் பஜ்ஜி மிக்ஸ், அரிசி மாவு, மீதமுள்ள மிளகாய் தூள், உப்பு, கொத்தமல்லி இலை எல்லாம் சேர்த்து நீர் சிறிது விட்டு பிசைந்து வைக்கவும்.
கடாயில் எண்ணெய் விட்டு காய்ந்ததும் இவற்றை பக்கோடா போடுவது போல் போட்டு பொரித்து எடுக்கவும்.
சூடான எண்ணெயில் சிறிது கறிவேப்பிலையும் பொரித்து சேர்க்கவும். சுவையான சிக்கன் பக்கோடா தயார்.
குறிப்புகள்:
இதில் ஃபுட் கலர் ஏதும் சேர்க்க தேவை இல்லை. மிளகாய் தூள் கலரே நல்ல சிவப்பு கலர் கொடுக்கும். கறிவேப்பிலையை சிக்கன் பொரிக்கும் முன்பே எண்ணெயில் பொரித்து எடுத்தால் சிக்கனிலும் அந்த வாசம் நன்றாக இருக்கும். சிக்கனை சிறுத் துண்டுகளாக போடுவது நல்லது. காரம், உப்பு எல்லாம் சிக்கனில் ஊறும். பஜ்ஜி மாவு பயன்படுத்தாமல், நீங்களே கடலை மாவு, அரிசி மாவு, உப்பு, மிளகாய் தூள் கலந்து பயன்படுத்தலாம். பஜ்ஜி மாவு பயன்படுத்தும் போது உப்பு, காரம் அதில் ஏற்கனவே இருக்கும் என்பதால் குறைவாக சேர்த்தால் போதுமானது.