சிக்கன் கட்லட்

on on on on off 1 - Great!
4 நட்சத்திரங்கள் - 1 மதிப்பாய்வின் அடிப்படையில்

தேவையான பொருட்கள்:

உருளைக்கிழங்கு - 150 கிராம்

சிக்கனை சுருட்டி கொள்ள:

சிக்கன் கீமா - 100 கிராம்

மிளகாய் தூள் - 1/2 தேக்கரண்டி

உப்பு - தேவைக்கு

இஞ்சி பூண்டு பேஸ்ட் - 1 1/2 தேக்கரண்டி

தக்காளி (பொடியாக நறுக்கி போடவும்) - கால் துண்டு

தயிர் - அரை தேக்கரன்டி

வெங்காயம் (பொடியாக நறுக்கியது) - 2

பச்சை மிளகாய் (பொடியாக நறுக்கியது) - 2

கொத்தமல்லி தழை (பொடியாக நறுக்கியது) - 1/2 கப்

கரம் மசாலா தூள் - 1/2 தேக்கரண்டி

முட்டை - 1 1/2

க்ரெம்ஸ் பவுடர் - முக்கி கொள்ள தேவையான அளவு

செய்முறை:

சிக்கனை கீமா செய்து சுருட்ட வேண்டியவைகளை சுருட்டி ஆற வைக்கவும்.

உருளையை வேக வைத்து தண்ணீர் இல்லாமல் வடித்து ஆற வைத்து சிக்கனுடன் சேர்த்து பிசையவும்.

கடைசியில், வெங்காயம், பச்சை மிளகாய், கொத்தமல்லி, கரம் மசாலா தூள் சேர்த்து நல்ல கெட்டியாக பிசைந்து முட்டையில் இரண்டு பக்கமும் டிப் செய்து க்ரம்ஸ் பவுடரில் இரண்டு பக்கமும் முக்கி ஒரு தட்டில் அடுக்கி வைத்து; சிறிது நேரம் கழித்து பொரிக்கவும்.

குறிப்புகள்: