சாம்பார் வடை

off off off off off 0

தேவையான பொருட்கள்:

உளுந்து - ஒரு ஆழாக்கு

கடலைப்பருப்பு - கால் ஆழாக்கு

பச்சை மிளகாய் - 5

சின்ன வெங்காயம் - 10

துவரம்பருப்பு - 100 கிராம்

மஞ்சள் தூள் - கால் தேக்கரண்டி

வரமிளகாய் - 7

தனியா - 2 தேக்கரண்டி

வெந்தயம் - கால் தேக்கரண்டி

சீரகம் - கால் தேக்கரண்டி

புளி - எலுமிச்சை அளவு

தக்காளி - 2

கடுகு, உளுத்தம் பருப்பு - ஒரு தேக்கரண்டி

பெருங்காயம் - கால் தேக்கரண்டி

கறிவேப்பிலை - ஒரு கொத்து

எண்ணெய் - வடை பொரிக்க தேவையான அளவு

உப்பு - தேவையான அளவு

செய்முறை:

உளுந்தையும், கடலைப்பருப்பையும் 2 மணி நேரம் ஊறவைத்து தண்ணீரை வடித்து விட்டு பச்சை மிளகாய், உப்பு போட்டு வெண்ணெய் போல் அரைக்கவும்.

சின்ன வெங்காயத்தை பொடியாக நறுக்கி மாவில் சேர்த்து பிசைந்து கடாயில் எண்ணெய் சூடாக்கி வடையாக தட்டி வேக வைத்து எண்ணெய் வடித்து எடுக்கவும்.

துவரம்பருப்பை மஞ்சள் தூளுடன் சேர்த்து வேகவைத்து எடுக்கவும். புளியை கரைத்து கொதிக்க விடவும்.

வரமிளகாய், தனியா, சீரகம், வெந்தயம் ஆகியவற்றை வறுத்து தூளாக்கி கொதிக்கும் புளியில் சேர்க்கவும்.

தக்காளி, 6 சின்னவெங்காயம், உப்பு போட்டு கொதிக்கவிடவும். அதில் வேக வைத்த பருப்பை போடவும்.

ஒரு கடாயில் ஒரு தேக்கரண்டி எண்ணெய் விட்டு கடுகு, உளுத்தம் பருப்பு, பெருங்காயம் தாளித்து கறிவேப்பிலை போட்டு சாம்பாரில் கொட்டி கொதிக்க விடவும். வடைகளை போட்டு ஊறப்போடவும் பிறகு எடுத்து பரிமாறவும்.

குறிப்புகள்: