சாதம் பனீர் பக்கோடா
0
தேவையான பொருட்கள்:
சாதம் - 1 கப்
வெங்காயம் - 1 கப்
பச்சை மிளகாய் - 3
கரம் மசாலா - 1/2 தேக்கரண்டி
மிளகாய் தூள் - 1 தேக்கரண்டி
சோளமாவு - 3 தேக்கரண்டி
துருவிய பனீர் - 1/2 கப்
எண்ணெய் - பொரிக்க தேவையான அளவு
உப்பு - தேவையான அளவு
செய்முறை:
வெங்காயம் மற்றும் பச்சை மிளகாயை பொடியாக நறுக்கவும்.
கொடுத்துள்ள எல்லா பொருட்களையும் தண்ணீர் இல்லாமல் பக்கோடா பதத்திற்கு பிசறி வைக்கவும். தேவையானால் சிறிதளவு எண்ணெய் சேர்த்து கொள்ளவும்.
பிறகு சிறிதளவு கலவையாய் எடுத்து கொதிக்கும் எண்ணெயில் சிறிது சிறிதாக கிள்ளி விடவும்.
பொன்னிறமானதும் எடுத்து கொத்தமல்லி சட்னியுடன் பரிமாறவும்.