சர்க்கரைவள்ளி கிழங்கு போண்டா (1)

off off off off off 0

தேவையான பொருட்கள்:

சர்க்கரைவள்ளி கிழங்கு - 2

உருளைக்கிழங்கு - 1

வெள்ளை எள் - 2 தேக்கரண்டி

பச்சைமிளகாய் - 5

கொத்தமல்லி - 1/2 கட்டு

கடலை மாவு - 100 கிராம்

அரிசிமாவு - 2 தேக்கரண்டி

எண்ணெய் - பொரிக்க தேவையான அளவு

உப்பு - தேவையான அளவு

செய்முறை:

பச்சைமிளகாயையும், கொத்தமல்லியையும் அரைக்கவும். சர்க்கரைவள்ளிக்கிழங்கையும், உருளைக்கிழங்கையும் வேக வைத்து பிசையவும். இதனுடன் அரைத்த விழுது, உப்பு, எள் சேர்த்து நன்கு பிசைந்து சிறு சிறு உருண்டைகளாக உருட்டவும்.

ஒரு பாத்திரத்தில் கடலைமாவு, அரிசிமாவு, சிறிது உப்பு போட்டு கெட்டியாக கரைக்கவும்.

ஒரு கடாயில் எண்ணெய்யை காயவைத்து உருண்டைகளை மாவில் முக்கி போட்டு வெந்தவுடன் எடுத்து பரிமாறவும்.

குறிப்புகள்: