சமோசா

on on on on on 1 - Excellent!
5 நட்சத்திரங்கள் - 1 மதிப்பாய்வின் அடிப்படையில்

தேவையான பொருட்கள்:

மைதா மாவு - 250 கிராம்

பேக்கிங் பவுடர் - 1 தேக்கரண்டி

நெய் - 1 1/2 மேசைக்கரண்டி

கெட்டி தயிர் - 1 தேக்கரண்டி

கேரட் (பொடியாக நறுக்கியது) - 1/2 கப்

பட்டாணி (வேகவைத்தது) - 1/4 கப்

உருளைக்கிழங்கு (வேகவைத்து மசித்தது) - 1/2

மிளகாய் தூள் - 1/2 தேக்கரண்டி

தனியா தூள் - 3 சிட்டிகை

உப்பு - தேவையான அளவு

செய்முறை:

மைதாமாவுடன் பேக்கிங் பவுடரை கலந்து சலித்து உப்பு, நெய், தயிர் தேவையான அளவு தண்ணீர் சேர்த்து கெட்டியாக பிசைந்து 1/2 மணி நேரம் ஊறவைக்கவும்.

வாணலியில் எண்ணைய் ஊற்றி காய்ந்ததும் கடுகு தாளித்து காய்கறிகளை போட்டு வதக்கவும்.

அதில் மிளகாய்தூள், தனியா தூள்,உப்பு போட்டு வதக்கி கலவையை தனியே வைக்கவும்.

1/2 மணிக்குப் பிறகு பிசைந்த மாவை மீண்டும் நன்கு பிசைந்து சிறிய சிறிய உருண்டைகளாக உருட்டி வட்டமாக தேய்த்து அதை அப்படியே பாதியாக மடித்து மேலே தேய்த்து அதை கோன் வடிவமாக செய்து காய்கறிக்கலவையை வைத்து மூடி 1/2 மணி நேரம் அப்படியே வைக்கவும்.

வாணலியில் காயவைத்த எண்ணையில் போட்டு பொரித்து எடுக்கவும்.

குறிப்புகள்: