சன்னா கபாப்
தேவையான பொருட்கள்:
சன்னா - 250 கிராம்
காரட் - 1/4 கப்
உருளைக்கிழங்கு - 1
வெங்காயம் - 1/4 கப்
பச்சை மிளகாய் - 2
கடலை மாவு - 1/4 கப்
மல்லி இலை - 1 தேக்கரண்டி
வறுத்த சீரகம் - 1 தேக்கரண்டி
சீரகத்தூள் - 1 தேக்கரண்டி
துருவிய தேங்காய் - 1/2 கப்
மிளகாய் தூள் - 1 தேக்கரண்டி
எண்ணெய் - பொரிக்க தேவையான அளவு
உப்பு - தேவையான அளவு
செய்முறை:
சன்னாவை உப்பு சேர்த்து வேகவைத்து தண்ணீரை வடிக்கட்டி கொரகொரப்பாக அரைத்து கொள்ளவும்.
காரட்டை துருவி பிழிந்து வைக்கவும். உருளையை உப்பு சேர்த்து வேகவைத்து மசித்து வறுத்த சீரகம், உப்பு, பொடியாக நறுக்கிய பச்சை மிளகாய், மிளகாய் தூள், சீரகத்தூள், துருவிய தேங்காய், பொடியாக நறுக்கிய வெங்காயம், மல்லி இலை, கொரகொரப்பாக அரைத்து வைத்துள்ள சன்னா, கடலைமாவு சேர்த்து நன்கு கிளறவும்.
பிறகு துருவிய காரட்டை சேர்த்து நீளமான உருண்டைகளாக பிடித்து வைக்கவும். இந்த உருண்டைகளை எண்ணெயில் பொன்னிறமாக பொரித்தெடுக்கவும்.