கோஸ் பக்கோடா
0
தேவையான பொருட்கள்:
கோஸ் துருவல் - 2 கப்
அரிசி மாவு - 1 கைப்பிடி
கடலை மாவு - 2 கைப்பிடி
பச்சை மிளகாய் - 4
பெரிய வெங்காயம் - 2
இஞ்சி - சிறிது
கறிவேப்பிலை - சிறிது
கொத்தமல்லி தழை - சிறிது
எண்ணெய் - பொரிக்க தேவையான அளவு
உப்பு - தேவையான அளவு
செய்முறை:
வெங்காயம், பச்சை மிளகாய், இஞ்சி கறிவேப்பிலை, கொத்தமல்லி தழையை பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.
அத்துடன் எல்லா மாவு, கோஸ் துருவல் உப்பு சேர்த்து தண்ணீர் தெளித்து பக்கோடா மாவு (கெட்டியாக) பதத்திற்கு பிசையவும்.
வாணலியில் எண்ணெய் விட்டு காய்ந்தவுடன், மாவை எண்ணெயில் உதிர்த்து விடவும். சிவக்க விட்டு எடுத்து பரிமாறவும்.