கோவக்காய் பக்கோடா

off off off off off 0

தேவையான பொருட்கள்:

கோவக்காய் - 250 கிராம்

ராகி மாவு - 2 கப்

வறுத்த நிலக்கடலை (பொடித்தது) - ஒரு கப்

பொட்டுக்கடலை (பொடித்தது) - ஒரு கப்

சீரகம் - 2 தேக்கரண்டி

காய்ந்த மிளகாய் - 4 (அ) காரத்திற்கேற்ப

கறிவேப்பிலை - 4 இணுக்கு

பெரிய வெங்காயம் - 2

எண்ணெய் - பொரிக்க தேவையான அளவு

உப்பு - தேவையான அளவு

செய்முறை:

பொட்டுக்கடலையை அரைக்கும்போதே சீரகம், காய்ந்த மிளகாய் சேர்த்து அரைக்கவும்.

ராகி மாவுடன், பொடியாக நறுக்கிய வெங்காயம், நிலக்கடலை மாவு, பொட்டுக்கடலை மாவை சேர்க்கவும்.

அதனுடன் வட்ட துண்டுகளாக நறுக்கிய கோவக்காய், கறிவேப்பிலை, தேவையான அளவு உப்பு சேர்த்து சிறிது நீர் தெளித்து சப்பாத்தி மாவு பதத்திற்கு பிசையவும்.

வாணலியில் எண்ணெய் விட்டு காய்ந்ததும் மாவு கலவையை உதிர்த்துப் போட்டு பொரித்தெடுக்கவும்.

குறிப்புகள்: