கோப்தா கறி

off off off off off 0

தேவையான பொருட்கள்:

அரைக்க - 1 :

மட்டன் (சிறு துண்டாக நறுக்கியது) - 1 கிலோ

வெங்காயம் ( நறுக்கியது) - 1

பச்சை மிளகாய் - 3

ஏலக்காய் - 1 பொடி செய்தது

கடலை மாவு - 3 மேசைக்கரண்டி

மிளகாய் பொடி - 1 தேக்கரண்டி

இஞ்சி பேஸ்ட் - சிறிதளவு

அரைக்க - 2:

பெரிய வெங்காயம் -- 2

இஞ்சி - 1/2 அங்குலம்

பூண்டு - 8 பல்

முட்டை - 1

தக்காளி - 3

மஞ்சள் தூள் - 1 தேக்கரண்டி

மிளகாய் பொடி - 1 தேக்கரண்டி

கரம் மசாலா பொடி - 1/2 தேக்கரண்டி

தனியாபொடி - 2 தேக்கரண்டி

நெய் - 3 தேக்கரண்டி

எண்ணைய் - பொரிக்க தேவையான அளவு

உப்பு - தேவையான அளவு

செய்முறை:

அரைக்க - 1, அரைக்க - 2 ல் உள்ள பொருட்களை அரைத்துக் கொள்ளவும். தண்ணீர் அதிகம் ஊற்ற வேண்டாம்.

அரைக்க - 1 ல் உள்ள கலவையுடன் முட்டையை சேர்த்து கலக்கி சிறு சிறு உருண்டைகளாக உருட்டவும்.

இந்த உருண்டைகளை எண்ணையில் பொரித்துக் கொள்ளவும்.

அரைக்க - 2 ல் உள்ள பொருட்களை அரைத்து தனியே வைக்கவும்.

பின் தக்காளியை அரைத்து தோலையும் , கொட்டையையும் நீங்குமாறு வடிகட்டவும். ( தக்காளி பேஸ்ட் இருந்தால் 2 ஸ்பூன் சேர்க்கவும்)

இதனுடன் மஞ்சள்தூள், மிளகாய் தூள், தனியா தூள், கரம் மசாலாபொடி,உப்பு சேர்த்து இந்த கலவையை அரைக்க - 2 கலவையுடன் சேர்க்கவும்.

வாணலியில் நெய் ஊற்றி இந்த கலவையைக் கொட்டவும். நெய் தனியாக மேலே வந்ததும் 3 கப் தண்ணீர் ஊற்றி கொதிக்கவிடவும்.

சிம்மில் வைத்து 5 நிமிடங்களுக்குப் பிறகு பொரித்த உருண்டைகளை போட்டு மீண்டும் கொதிக்க விடவும்.

15 நிமிடங்களுக்குப் பிறகு இறக்கி பறிமாறலாம்.

குறிப்புகள்: