கோதுமை மசாலா வடை (1)
தேவையான பொருட்கள்:
உடைத்த கோதுமை (அல்லது) கோதுமை ரவை - 1 கப்
வெள்ளை உளுந்து - 1/2 கப்
பெரிய வெங்காயம் (பொடியாக நறுக்கியது) - 1/2 கப்
பச்சை மிளகாய் (பொடியாக நறுக்கியது) - 2
சோம்பு - 1/2 தேக்கரண்டி
கறிவேப்பிலை (பொடியாக நறுக்கியது) - 2 கீற்று
எண்ணெய் - வடை பொரிக்க தேவையான அளவு
உப்பு - தேவையான அளவு
செய்முறை:
பெரிய வெங்காயத்தையும், பச்சைமிளகாயையும் பொடியாக நறுக்கி உப்பு போட்டு விரவி வைக்கவும். கறிவேப்பிலையையும் நறுக்கி கொள்ளவும்.
உடைத்த கோதுமை (or) கோதுமை ரவை, மற்றும் வெள்ளை உளுந்தை 3 மணி நேரம் ஊற வைத்து "கொரகொரப்பாக்" அரைத்துக் கொள்ளவும். நைஸாக வேண்டாம். அரைத்த விழுது ஒன்றிரண்டாக இருந்தாலும் பரவாயில்லை.
ஒரு பாத்திரத்தில் அரைத்த மாவையும், சோம்பு, நறுக்கி வைத்துள்ள வெங்காயம், பச்சைமிளக்காய், கறிவேப்பிலை இவற்றை பிழிந்து விட்டு விரவவும்(உப்பு பார்த்துவிட்டு போடவும்).
பொரிக்க எண்ணெய் விட்டு காய்ந்ததும் சிறு சிறு வடைகளாக தட்டி எண்ணெயில் போட்டு பொரித்து எடுக்கவும்.
வடைகளாக சரியாக தங்களுக்கு தட்ட வராது என்றால் ஒரு சின்ன குழிக்கரண்டியில் எண்ணெய் தேய்த்து அரைத்த மாவை கொஞ்சம் கொஞ்சமாக எடுத்து எண்ணெயில் போட்டு பொரித்து எடுக்கவும். சுவையான கோதுமை மசாலா வடை தயார்.