கோதுமை பக்கோடா
தேவையான பொருட்கள்:
கோதுமை மாவு - 150 கிராம்
சின்ன வெங்காயம் - 100 கிராம்
பச்சை மிளகாய் - 2
காய்ந்த சிவப்பு மிளகாய் - 2
கறிவேப்பிலை - சிறிதளவு
மாசி தூள் - 2 தேக்கரண்டி
மிளகாய் தூள் - 1 தேக்கரண்டி
நச்சீரகம் - 1/4 தேக்கரண்டி
ஆப்ப சோடா - 2 சிட்டிகை
எண்ணெய் - பொரிக்க தேவையான அளவு
உப்பு - தேவையான அளவு
செய்முறை:
வெங்காயம், பச்சை மிளகாய் இரண்டையும் பொடியாக நறுக்கி கொள்ளவும்
சிவப்பு மிளகாயில் உள்ள விதைகளை நீக்கி விடவும்
கோதுமை மாவில் நறுக்கிய வெங்காயம், பச்சை மிளகாய், கறிவேப்பிலை, சிவப்பு மிளகாய், நச்சீரகம், மிளகாய் தூள், மாசி தூள், உப்பு, ஆப்ப சோடா அனைத்தையும் சேர்த்து பக்கோடா சுடும் பதத்திற்கு தண்ணீர் ஊற்றி பிசைந்து கொள்ளவும், மாவினை 5 நிமிடங்கள் ஊற விடவும்
அடுப்பில் பொரிக்கும் சட்டியில் எண்ணெய் ஊற்றி சூடானதும் மாவினை கையால் சிறிய அளவாக எடுத்து போட்டு பொரித்து எடுத்து பரிமாறவும்.