கேழ்வரகு பக்கோடா

off off off off off 0

தேவையான பொருட்கள்:

கேழ்வரகு - 1/4 கிலோ

வேர்க்கடலை - 100 கிராம்

எண்ணெய் - பொரிக்க தேவையான அளவு

உப்பு - தேவையான அளவு

செய்முறை:

கேழ்வரகை நன்றாக கல்லை நீக்கி தண்ணீரில் கழுவி காய வைக்க வேண்டும். பின்னர் காய வைத்த கேழ்வரகை மிக்ஸியில் அரைக்கவும். அரைத்த மாவினை நைசான துணியில் சலிக்கவும்.

சலித்த மாவை, வறுத்து தோல் நீக்கிய வேர்க்கடலையில் சேர்த்துக் கொள்ள வேண்டும்.

அத்துடன் ஒரு கப் தண்ணீர் கலந்து கொள்ள வேண்டும். ஒரு தேக்கரண்டி உப்பை சேர்த்து நன்றாக கலக்க வேண்டும்.

கால் கிலோ எண்ணெய்யை வாணலியில் 5 நிமிடம் சூடுபடுத்தவும். சூடுபடுத்திய எண்ணெய்யில் கேழ்வரகு, வேர்க்கடலை கலவையை பகோடா வடிவில் உருட்டிப் போடவும்.

10 நிமிடம் வேக வைத்து, பின் பகோடாவை வெளியில் எடுத்து எண்ணெய்யை வடிகட்டி பரிமாறவும்.

குறிப்புகள்: