கேழ்வரகு சாட்ஸ்
0
தேவையான பொருட்கள்:
கேழ்வரகு மாவு - 1 கப்
ஜவ்வரிசி - 50 கிராம்
வெங்காயம் - 2
காரட் - 2
பச்சைமிளகாய் - 5
கறிவேப்பிலை - தேவையான அளவு
கொத்தமல்லி - தேவையான அளவு
எண்ணெய் - 150 கிராம்
உப்பு - தேவையான அளவு
செய்முறை:
கேழ்வரகு மாவை எடுத்து உப்பு தண்ணீர் விட்டு மாவை பிசைந்து சிறிய சிறிய உருண்டையாக உருட்டிக் கொள்ளவும்.
அதை இட்லி போல் 5 நிமிடம் வேகவைக்கவும்.
ஜவ்வரிசியை எண்ணெயில் போட்டு பொரித்துக் கொள்ளவும்.
வெங்காயம், பச்சைமிளகாய் ஆகியவற்றைப் பொடியாக அரிந்து வாணலியில் ஒரு தேக்கரண்டி எண்ணெய் விட்டு லேசாக வதக்கவும்.
வேக வைத்த உருண்டையையும் பொரித்த ஜவ்வரிசியையும் வதக்கிய வெங்காயத்தில் போட்டு பிரட்டி, பிறகு பொடியாக அறிந்த காரட்டையும் தூவ வேண்டும்.
கறிவேப்பிலை, கொத்தமல்லித் தழை தூவி அழகு படுத்தவும்.