கேரட் வடை
தேவையான பொருட்கள்:
துருவிய கேரட் - 1 கப்
கடலை மாவு - 2 தேக்கரண்டி
மைதா - 1 தேக்கரண்டி
கடலைப்பருப்பு - 1 தேக்கரண்டி
இஞ்சி,பூண்டு விழுது - 1 தேக்கரண்டி
பச்சைமிளகாய் (பொடிதாக நறுக்கியது) - 2
வெங்காயம் (பொடிதாக நறுக்கியது) - 1
புதினா (பொடிதாக நறுக்கியது) - 1/2 கப்
கொத்தமல்லி இலை (பொடிதாக நறுக்கியது) - 1/2 கப்
கறிவேப்பிலை (பொடிதாக நறுக்கியது) - 1/4 கப்
எண்ணெய் - வடை பொரிக்க தேவையான அளவு
உப்பு - தேவையான அளவு
செய்முறை:
கடலைப்பருப்பை 1/2 மணி நேரம் ஊற வைத்து எடுத்து கொள்ளவும். மற்ற தேவையான பொருட்கள் அனைத்தையும் தயாராக எடுத்து வைத்துக் கொள்ளவும்.
ஒரு பாத்திரத்தில் எண்ணெயை தவிர மற்ற அனைத்துப் பொருட்களையும் ஒன்றாக போட்டு தண்ணீர் சேர்க்காமல் நன்றாக பிசைந்து கொள்ளவும்.
பிறகு ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் பிசைந்து வைத்திருக்கும் மாவை சிறிய உருண்டையாக எடுத்து வடைகளாக தட்டி போடவும்.
வடை இருபுறமும் வெந்து பொன்னிறமானதும் எடுத்து பரிமாறவும்.