கெட்டி வடை

off off off off off 0

தேவையான பொருட்கள்:

உளுத்தம்பருப்பு - 1 கப்

கடலைப்பருப்பு - 4 தேக்கரண்டி

இஞ்சி - 1/4 அங்குலத் துண்டு

பச்சைமிளகாய் - 4

கொத்தமல்லித்தழை - ஒரு சிறிய கட்டு

கறிவேப்பிலை - சிறிது

எண்ணெய் - வடை பொரிக்க தேவையான அளவு

உப்பு - தேவையான அளவு

செய்முறை:

உளுத்தம்பருப்பு, கடலைப்பருப்பு இரண்டையும் சிறிது நேரம் ஊற வைத்து, உரலில் போட்டு, உப்பையும் சேர்த்து நறநறவென்று அரைத்துக் கொள்ளவும்.

கறிவேப்பிலை, பச்சைமிளகாய், இஞ்சி, கொத்தமல்லித்தழை ஆகியவற்றை பொடிப்பொடியாக நறுக்கி மாவுடன் சேர்த்து நன்கு பிசைந்துக் கொள்ளவும்.

வாணலியை அடுப்பில் வைத்து போதிய அளவு எண்ணெய் அல்லது டால்டா விட்டு காய்ந்ததும் மாவினை வடைகளாகத் தட்டிப் போட்டு வேகவைத்து எடுத்து பரிமாறவும்.

குறிப்புகள்: