குழிப்பணியாரம்

on on off off off 1 - Ok!
2 நட்சத்திரங்கள் - 1 மதிப்பாய்வின் அடிப்படையில்

தேவையான பொருட்கள்:

புழுங்கல் அரிசி - 2 ஆழாக்கு

பச்சை அரிசி - 2 ஆழாக்கு

உளுந்து - 1 ஆழாக்கு

வெந்தயம் - 10 கிராம்

வெல்லம் - 1/4 கிலோ

ஏலக்காய் - 5

வெங்காயம் - 5

பச்சை மிளகாய் - 2

கறிவேப்பிலை - 2 கொத்து

எண்ணை - பொரிக்க தேவையான அளவு

உப்பு - தேவையான அளவு

செய்முறை:

பணியாரம் சுடுவதற்கு சற்று முன்பு வெங்காயம், மிளகாய், கறிவேப்பிலை ஆகியவற்றை பொடியாக நறுக்கவும்.

புழுங்கல் அரிசி, பச்சை அரிசி, உளுந்து, வெந்தயம் நான்கையும் 5 மணி நேரம் ஊற வைத்து, அதிகம் தண்ணீர் விடாமல் உப்பு சேர்த்து கெட்டியாக அரைத்து, சுமார் ஆறு மணி நேரம் புளிக்க வைக்கவும். இதற்கு காலையிலேயே அரிசி ஊற வைத்து, மதியம் எடுத்து அரைத்து வைத்தால் மாலையில் புளித்த பின்பு பணியாரம் சுட சரியாக இருக்கும்.

புளித்த மாவினை இரண்டு பாகமாகப் பிரித்து, தனித்தனி பாத்திரங்களில் எடுத்துக் கொள்ளவும்.

அடுப்பில் கடாயை வைத்து ஒரு தேக்கரண்டி எண்ணை ஊற்றி கடுகு & உளுந்து தாளிக்கவும். பின்னர் நறுக்கி வைத்துள்ளவற்றைப் போட்டு சிறிது நேரம் வதக்கி இறக்கவும்.

வெல்லத்தைப் பொடித்து 50 மில்லி தண்ணீர் விட்டு இளம்பாகு காய்ச்சவும். வெல்லம் முழுவதும் கரைந்து விட்டால் இறக்கி விடவும். அதில் ஏலக்காயை பொடித்து போடவும்.

புளித்த மாவை இரண்டு பாத்திரத்தில் பிரித்து வைத்து ஒன்றில் வெல்லப் பாகையும், மற்றதில் வெங்காயக் கலவையையும் போட்டு நன்றாக கலக்கவும்.

அடுப்பில் குழிப்பணியாரச் சட்டியை வைத்து குழிகளில் லேசாக எண்ணை விட்டு முதலில் இனிப்பு மாவை முக்கால் குழி வரும் வரை ஊற்றவும்.

பிறகு மூடி வைத்து ஒருபுறம் வெந்ததும் திருப்பிப் போட்டு மறுபுறத்தையும் வேகவிட்டு எடுக்கவும்.

இதே போல் அடுத்து கார மாவை ஊற்றவும். சட்டியில் சிறிது எண்ணெய் தடவி விட்டால் எடுப்பதற்கு எளிதாக இருக்கும்.

இப்படி மாற்றி மாற்றி ஊற்றி எடுக்கவும். மிகவும் கருக விடாமல், பதமாக வெந்ததும் எடுத்து பரிமாறவும்.

குறிப்புகள்: