குட்டி சமோசா
தேவையான பொருட்கள்:
மாவு தயாரிக்க:
மைதா மாவு - 1 கப்
பட்டர் - 4 மேசைக்கரண்டி
கார்ன் பிளார் மாவு - 1 மேசைக்கரண்டி
பேகிங் சோடா - ஒரு பின்ச்
உப்பு - தேவையான அளவு
பில்லிங் செய்ய:
சிக்கன் கீமா (அல்லது) மட்டன் கீமா - 100 கிராம்
இஞ்சி பூண்டு பேஸ்ட் - 1 தேக்கரண்டி
மிளகாய் தூள் - 1/4 தேக்கரன்டி
கரம் மசாலா தூள் - 1/4 தேக்கரண்டி
நன்கு பொடியாக நறுக்கிய வெங்காயம் - 2
சில்லி சாஸ் - ஒரு தேக்கரண்டி
சோயா சாஸ் - 1/4 தேக்கரண்டி
செய்முறை:
சமோசா ஷிட் செய்து கொள்ளவும்:
மாவை பிசைந்து ஒரு கவரில் கட்டி இரண்டு மணிநேரம் உற வைக்கவும்.
பிறகு எடுத்து மாவு தேய்த்து மெல்லிய சப்பாத்திகளாக இட்டு தவாவை லேசாக சூடுப்படுத்தி இரு புறமும் போட்டு உடனே எடுத்து விடவேண்டும்.
பிறகு தவாவில் போட்டு எடுத்த சப்பாத்தியை ஒரு ஸ்கேல் கொண்டு ஒரே அளவாக நீளமான துண்டுகள் தயாரிக்கவும்.
இது ஒரே அளவாக இருக்கும் படி வெட்டி மீதியை மீதம் ஆகும் துண்டுகளை இனிப்பு மற்றும் கார கோடா தயாரிக்க வைத்து கொள்ளவும்.
பில்லிங் செய்வதற்கு:
கீமாவில் அனைத்து பொருட்களையும் போட்டு கிளறி ஐந்து நிமிடம் ஊற வைத்து கால் கப் தண்ணீர் ஊற்றி தண்ணீர் வற்ற விட்டு வேகவைக்கவும்.
நீள துண்டுகளை முக்கோண வடிவில் குருக்கும் நெடுக்குமாக மடித்து சிக்கன் கீமா (அ) மட்டன் கீமா பில்லிங்கை வைத்து மூடி கடைசியில் மைதாவை கொஞ்சம் தண்ணீரில் கரைத்து பேஸ்ட் போல் குழைத்து சமோசாவை ஒட்டவும்.
இப்போது இதே மாதிரி எல்ல சமோசாவையும் தயாரித்து பிரிட்ஜில் வைத்து விடுங்கள். தேவைக்கு அவ்வப்போது எடுத்து பொரித்து எடுக்கவும்.