குடை மிளகாய் பஜ்ஜி

off off off off off 0

தேவையான பொருட்கள்:

பஜ்ஜி மாவு கலக்க:

குடை மிளகாய் - 6

கடலை மாவு - 1 டம்ளர்

மிளகாய் தூள் - 1/2 தேக்கரண்டி

கரம் மசாலா தூள் - 1/4 தேக்கரண்டி

பேக்கிங் சோடா - 1/4 தேக்கரண்டி

எண்ணெய் - 1/2 தேக்கரண்டி

உப்பு - தேவையான அளவு

மிளகாய் ஊற வைக்க:

குடை மிளகாய் - ஆறு

வினிகர் - 2 மேசைக்கரண்டி

சர்க்கரை - ஒரு பின்ச்

உப்பு - 1/4 தேக்கரண்டி

எண்ணெய் - பொரிக்க தேவையான அளவு

செய்முறை:

மிளகாயில் லேசா இரண்டு மூன்று துளை போட்டு வினிகர், உப்பு, சர்க்கரை போட்டு நல்ல ஒரு மணி நேரம் ஊற வைத்து விடுங்கள்.

பிறகு பஜ்ஜி மாவு கலக்க கொடுத்துள்ளவைகளை நன்கு பஜ்ஜி போடும் பதத்திற்கு கரைத்து பத்து நிமிடம் ஊற வைத்து விடுங்கள்.

பிறகு எண்ணெயை காய வைத்து ஊறிய மிளகாயை அதில் முக்கி பொரித்தெடுங்கள்.

குறிப்புகள்:

புதினா துவையல், சாஸுடன் சாப்பிடவும்.