கீரை வடை (6)

on on off off off 1 - Ok!
2 நட்சத்திரங்கள் - 1 மதிப்பாய்வின் அடிப்படையில்

தேவையான பொருட்கள்:

கடலைப்பருப்பு - 250 கிராம்

சின்ன வெங்காயம் - 100 கிராம்

பச்சைமிளகாய் - 10

முளைக்கீரை - தேவையான அளவு

முருங்கைக்கீரை - 1 கப்

எண்ணெய் - வடை பொரிக்க தேவையான அளவு

உப்பு - தேவையான அளவு

செய்முறை:

கடலைப்பருப்பை ஒரு மணி நேரம் ஊறவைத்து வடைக்கு தகுந்தாற்போல் அரைத்துக் கொள்ளவும்.

வெங்காயம், பச்சைமிளகாய், சுத்தம் செய்த கீரைகளை அரிந்து கொள்ளவும்.

பூண்டு, இஞ்சி, சீரகம், சோம்பு ஆகியவற்றை அம்மியில் வைத்து நசுக்கிக் கொள்ளவும்.

அரைத்த கடலைப்பருப்பு, நறுக்கின வெங்காயம், கீரை, மிளகாய், பூண்டு, இஞ்சி, சோம்பு, உப்பு ஆகியவற்றை சேர்த்து பிசைந்துக் கொள்ளவும்.

இதை வாணலியில் எண்ணெய் சூடு வந்தவுடன் சிறிய வடைகளாக தட்டி போட்டு சிவந்த நிறம் வந்ததும் எடுத்து பரிமாறவும்.

குறிப்புகள்: