கீரை வடை (5)

off off off off off 0

தேவையான பொருட்கள்:

கடலைப் பருப்பு - 200 கிராம்

முளைக்கீரை - இரண்டு கையளவு

பச்சை மிளகாய் விழுது - 2 தேக்கரண்டி

பெருங்காய நீர் - 2 தேக்கரண்டி

எண்ணெய் - வடை பொரிக்க தேவையான அளவு

உப்பு - தேவையான அளவு

செய்முறை:

கடலைப் பருப்பை களைந்து ஊற வைக்கவும். நன்கு ஊறியதும் மிக்ஸியில் உப்பு சேர்த்து நன்றாக அரைக்கவும்.

அரைத்த விழுதில் நைசாக அரிந்த கீரை, பச்சை மிளகாய் விழுது, பெருங்காய நீர், உப்பு சேர்த்து வடைகளாகத் தட்டி எண்ணெயில் பொரித்து எடுத்து பரிமாறவும்..

குறிப்புகள்:

இதில் எந்த கீரையும் பயன்படுத்தலாம். முருங்கை, பொன்னாங்கண்ணி போன்றவற்றின் இலைகளை மட்டும் பயன் படுத்தவும்.