கீரை வடை (4)
0
தேவையான பொருட்கள்:
உளுந்து - 2 ஆழாக்கு
கடலைப்பருப்பு - 5 தேக்கரண்டி
அரைக்கீரை - 1 கட்டு
கொத்தமல்லி - 1/2 கட்டு
எண்ணெய் - வடை பொரிக்க தேவையான அளவு
உப்பு - தேவையான அளவு
செய்முறை:
உளுந்தையும், கடலைப்பருப்பையும் ஒரு மணி நேரம் ஊற வைத்து ஆட்டவும். கீரையை பொடியாக நறுக்கி மாவில் போடவும். கொத்தமல்லியையும் பொடியாக கிள்ளி மாவில் போடவும். உப்பு சேர்த்து பிசையவும்.
ஒரு கடாயில் எண்ணெயை காயவைத்து மாவை பிசைந்து வடைகளாக தட்டி பொரித்து எடுத்து பரிமாறவும்.