கீரை வடை (2)
0
தேவையான பொருட்கள்:
கடலைப்பருப்பு - 1 டம்ளர்
உளுத்தம் பருப்பு - 1/4 டம்ளர்
மல்லித்தழை - 1 பெரிய கட்டு
வெங்காயம் - 3
பச்சைமிளகாய் - 2
எண்ணெய் - வடை பொரிக்க தேவையான அளவு
உப்பு - தேவையான அளவு
செய்முறை:
பருப்புவகைகளை தனியாக ஊறவைக்கவும்.
வெங்காயம் பச்சை மிளகாயை பொடியாக நறுக்கவும்.
மல்லித்தழையை, சுத்தம் செய்து, தடிமனான காம்பு பகுதியை நீக்கி விட்டு, பொடியாக நறுக்கிகொள்ளவும்.
ஊறிய பருப்பை மிக்ஸியில் கொரகொரப்பாக அரைக்கவும்.
அனைத்துப்பொருட்களுடன், சூடான எண்ணெய் ஒரு ஸ்பூன் அளவு சேர்த்து பிசைந்து கொள்ளவும்.
கைகளை நீரில் நனைத்துக்கொண்டு வடை மாவில் சிறு பந்து அளவு எடுத்து வட்டமாக தட்டி. நடுவில் பள்ளம் பதித்து, சூடான எண்ணெயில் மொறுமொறுப்பாக பொரித்து எடுத்து பரிமாறவும்.