கீரை வடை (1)
தேவையான பொருட்கள்:
புதினா (பொடியாக நறுக்கியது) - 1/4 கப்
கொத்தமல்லி தழை (பொடியாக நறுக்கியது) - 1/4 கப்
வெந்தயக்கீரை (பொடியாக நறுக்கியது) - 1/2 கப்
தண்டு கீரை (பொடிதாக நறுக்கியது) - 1/2 கப்
கறிவேப்பிலை (பொடிதாக நறுக்கியது) - 2 இனுக்கு
பெருங்காயத்தூள் - 1/2 தேக்கரண்டி
பச்சை மிளகாய் - 2 (காரத்திற்கு தகுந்தவாறு)
சீரகம் - 1 தேக்கரண்டி
சோடா மாவு - 2 சிட்டிகை
பச்சரிசி மாவு - 1 தேக்கரண்டி
சின்ன வெங்காயம் (பொடிதாக நறுக்கியது) - 1 கப்
கடலை பருப்பு - 1/4 கப்
துவரம் பருப்பு - 1/4 கப்
உளுத்தம் பருப்பு - 1 தேக்கரண்டி
பட்டாணி பருப்பு - 1/2 கப்
பாசி பருப்பு - 1 தேக்கரண்டி
எண்ணெய் - வடை பொரிக்க தேவையான அளவு
உப்பு - தேவையான அளவு
செய்முறை:
எல்லா கீரைகளையும் சுத்தம் செய்து நறுக்கிக்கொள்ளவும்.
எல்லா பருப்புகளையும் களைந்து 2 மணிநேரம் ஊறவைக்கவும்.
பின் பருப்புகளை மிக்ஸியில் போட்டு அரைக்கவும். (தண்ணீர் அதிகம் ஊற்றவேண்டாம்)
அரைத்த கலவையில் மற்ற எல்லா பொருட்களையும் போட்டு நன்கு பிசைந்து கொள்ளவும்.
சூடான எண்ணையை மாவில் ஊற்றி மீண்டும் பிசையவும். இதனால் வடை நன்கு வரும். பின் விருப்பமான வடிவில் வடையாக போட்டு சுட்டு எடுத்து பரிமாறவும்.