கீரை போண்டா
தேவையான பொருட்கள்:
பாலக் - ஒரு பிடி
கடலை மாவு - 1 கப்
அரிசி மாவு - 1 தேக்கரண்டி
வெங்காயம் - 1
பச்சை மிளகாய் - 1
மிளகாய் தூள் - 1 தேக்கரண்டி
சோடா மாவு - ஒரு சிட்டிகை
பெருங்காயத் தூள் - ஒரு சிட்டிகை
எண்ணெய் - பொரிக்க தேவையான அளவு
உப்பு - தேவையான அளவு
செய்முறை:
தேவையான பொருட்களை தயாராக எடுத்துக் கொள்ளவும். பாலக் கீரையை ஆய்ந்து, பொடியாக நறுக்கி கொள்ளவும். வெங்காயம், பச்சை மிளகாயையும் பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.
ஒரு பாத்திரத்தில் கடலை மாவு, அரிசிமாவு, சோடா மாவு சேர்த்து கலக்கவும். இதனுடன் மிளகாய் தூள் மற்றும் தேவையான உப்பு சேர்த்து நன்கு கலந்து கொள்ளவும். பின்னர் நறுக்கி வைத்துள்ள பாலக் கீரை, வெங்காயம், பச்சை மிளகாய் சேர்க்கவும்.
தண்ணீரை சிறிது, சிறிதாக சேர்த்து கட்டி இல்லாமல் கொஞ்சம் கெட்டி தயிர் பதத்துக்கு பிசைந்து கொள்ளவும். உப்பு சரிப் பார்க்கவும்.
ஒரு கடாயில் தேவையான அளவு எண்ணெய் ஊற்றவும்.எண்ணெய் காய்ந்ததும்,பிசைந்து வைத்துள்ள போண்டா மாவை ஒரு ஸ்பூனால் எடுத்து மெதுவாக எண்ணெயில் விடவும்.
போண்டா கொஞ்சம் உப்பி வரும். இரு பக்கமும் சிவந்ததும் எடுத்து டிஷ்யூ பேப்பரில் வைத்து பரிமாறவும்.