கீரை சமோசா

off off off off off 0

தேவையான பொருட்கள்:

மாவு தயாரிக்க:

மைதா மாவு - 1 கப்

கார்ன் ஃப்ளார் - 1 தேக்கரண்டி

ரவை - 1 தேக்கரண்டி

பேக்கிங் பவுடர் - 1/4 தேக்கரண்டி

எண்ணெய் - 1 1/2 மேசைக்கரண்டி

உப்பு - தேவையான அளவு

பில்லிங் செய்ய:

ஸ்பினாஷ் கீரை (அல்லது) பாலக் கீரை - ஒரு கைப்பிடி அளவு

உருளைக்கிழங்கு - 2

வெங்காயம் (பொடியாக நறுக்கியது) - 1

பச்சை மிளகாய் (பொடியாக நறுக்கியது ) - 1

இஞ்சி, பூண்டு விழுது - ஒரு தேக்கரண்டி

மல்லித் தழை - சிறிது

மஞ்சள் தூள் - 1/4 தேக்கரண்டி

மிளகாய் தூள் - 1/4 தேக்கரன்டி

கரம் மசாலா தூள் - 1/4 தேக்கரண்டி

சீரகம் - 1/2 தேக்கரண்டி

கடுகு - 1/2 தேக்கரண்டி

எண்ணெய் - பொரிக்க

செய்முறை:

தேவையானவற்றை தயாராக எடுத்துக் கொள்ளவும். மைதாவில் உப்பு, சூடுபடுத்திய எண்ணெய், கார்ன் ஃப்ளார், ரவை, பேக்கிங் பவுடர் சேர்த்து சப்பாத்தி மாவு போல் பிசைந்து ஒரு மணி நேரம் மூடி வைக்கவும். கீரையை சுத்தம் செய்து சிறிது தண்ணீர் விட்டு வேக வைத்துக் கொள்ளவும். உருளைக்கிழங்கை வேக வைத்து தோலை உரித்து மசித்துக் கொள்ளவும்.

கடாயில் எண்ணெய் விட்டு காய்ந்ததும் கடுகு, சீரகம் தாளித்து வெங்காயம், பச்சை மிளகாய், இஞ்சி, பூண்டு விழுது சேர்த்து வதக்கி தூள் வகைகள் சேர்த்து கிளறவும்.

பிறகு மசித்த உருளைக்கிழங்கு, வேக வைத்த கீரை, மல்லித் தழை சேர்த்து வேக விட்டு நன்கு ஆற விடவும்.

பிசைந்து வைத்துள்ள மாவை சிறு சிறு உருண்டைகளாக்கி வைக்கவும்.

பிறகு ஒரு உருண்டையை எடுத்து மெல்லியதாக தேய்த்து, இரண்டாக வெட்டவும்.

ஆற வைத்துள்ள கீரை கலவையை வைத்து மூடி ஓரங்களை தண்ணீரால் தடவி சமோசாக்களாக மடிக்கவும். இதேபோல் அனைத்து உருண்டைகளையும் சமோசாக்களாக செய்து வைக்கவும்.

கடாயில் எண்ணெய் விட்டு காய்ந்ததும் சமோசாக்களை பொன்னிறமாக பொரித்து எடுக்கவும்.

குறிப்புகள்: