கீரை கார்ன் வடை
0
தேவையான பொருட்கள்:
ஸ்வீட் கார்ன் - 3
பொட்டுக்கடலை - 1/2 கப்
அவல் - 1/2 கப்
சிகப்பு மிளகாய் - 4
பச்சை மிளகாய் - 3
இஞ்சி - அரை அங்குலம்
முளைக்கீரை - 1/2 கப்
சீரகம் - 1/2 தேக்கரண்டி
எண்ணெய் - வடை பொரிக்க தேவையான அளவு
உப்பு - தேவையான அளவு
செய்முறை:
அவலை 5 முதல் 10 நிமிடம் ஊற வைக்கவேண்டும். பச்சை மிளகாய், சிகப்பு மிளகாய், சீரகம், பொட்டுக்கடலையை பொடி செய்தபின் ஸ்வீட் கார்ன், உப்பு சேர்த்து வடை பதத்திற்கு அரைத்து கொள்ளவும்.
கீரையை பொடியாக நறுக்கி அரைத்த மாவுடன் சேர்க்கவும். அவலை நன்கு பிழிந்து மாவுடன் சேர்த்து வடையாக தட்டி பொரித்து எடுத்து பரிமாறவும்.