கீரை கணவா வடை

off off off off off 0

தேவையான பொருட்கள்:

கணவா - 5

கீரை - 1/2 கப்

சீரகம் - 1/2 தேக்கரண்டி

மிளகு - 1 தேக்கரண்டி

பெரிய வெங்காயம் - 1/2

மஞ்சள் தூள் - 1/4 தேக்கரண்டி

எண்ணெய் - வடை பொரிக்க தேவையான அளவு

உப்பு - தேவையான அளவு

செய்முறை:

கணவாவை நன்கு சுத்தம் செய்து வைத்துக் கொள்ளவும். வெங்காயத்தை பொடியாக நறுக்கிக் கொள்ளவும். மிளகை பொடி செய்து வைத்துக் கொள்ளவும்.

மிக்ஸியில் கணவா, மிளகு போட்டு அரைத்து எடுத்துக் கொள்ளவும்.

ஒரு பாத்திரத்தில் அரைத்தவற்றை போட்டு சீரகம், பொடி செய்த மிளகு, நறுக்கின வெங்காயம், மஞ்சள் தூள், உப்பு, கீரை ஆகியவற்றை போட்டு பிசைந்து 10 நிமிடம் ஊற வைக்கவும்.

தோசை கல்லை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி பிசைந்து வைத்த கலவை ஊறியதும் ஒரு பெரிய நெல்லிக்காய் அளவு உருண்டையாக எடுத்து தட்டி தோசை கல்லில் போடவும். ஒரே நேரத்தில் 4 அல்லது 5 வடைகள் போடவும்.

3 நிமிடம் கழித்து திருப்பி போட்டு 2 நிமிடம் கழித்து எடுத்து பரிமாறவும்.

குறிப்புகள்: