கீமா கபாப்

off off off off off 0

தேவையான பொருட்கள்:

கீமா உருண்டை செய்ய:

மட்டன் (தனியாக வேகவைத்தது) - 1/2 கிலோ

தேங்காய் - 1/2 மூடி

துவரம் பருப்பு (வேகவைத்தது) - 1/2 கப்

பூண்டு - 1 பல்

கொத்தமல்லி - 1/4 கட்டு

பட்டை - 1 அங்குலம் அளவு

கிராம்பு - 3

சாம்பார் பொடி - 1 தேக்கரண்டி

உப்பு - 1/2 தேக்கரண்டி

வெங்காயம் (பொடியாக நறுக்கியது) - 2

எண்ணைய் - பொரிக்க தேவையான அளவு

தக்காளி சட்னி செய்ய:

தேங்காய் - 1

தக்காளி - 1/4 கிலோ

இஞ்சி - சிறிது

பூண்டு - 2 பல்

பட்டை - 1/2 அங்குலம்

கிராம்பு - 4

வெங்காயம் - 2

கொத்தமல்லி - 1/4 கட்டு

தனியா - 1 தேக்கரண்டி

மிளகாய் பொடி - 1 தேக்கரண்டி

உப்பு - 1/2 தேக்கரண்டி

செய்முறை:

கீமா உருண்டை செய்ய:

வெங்காயம் தவிர மட்டனுடன் மற்ற எல்லாவற்றையும் ஒன்றாக போட்டு மிக்ஸியில் அரைக்கவேண்டும்.

மிக்ஸி ஓடுவதற்காக சிறிது தண்ணீர் தெளிக்கலாம்.

இது கெட்டி மாவு போல் அரைத்ததும் வெங்காயத்தை கலந்து சிறு சிறு உருண்டைகளாக உருட்டிக் கொள்ளவும்.

தக்காளி சட்னி செய்ய:

மிளகாய் பொடி தவிர மற்ற அனைத்தையும் மிக்ஸியில் அரைத்து வைத்துக் கொள்ளவும்.

இன்னொரு வாணலியில் கடுகு தாளித்து மிளகாய் பொடியையும் போட்டு உடனுக்குடன் அரைத்து வைத்த தக்காளி மசாலாவையும் கொட்டி உப்பு சேர்த்து நன்கு கொதிக்க வைத்து சட்னி பதத்திற்கு வந்ததும் இறக்கி கீமா உருண்டைகளை இதி போட்டு சுட சுட சாப்பிடலாம்.

குறிப்புகள்: