கீமா கட்லெட்

on on on on off 1 - Great!
4 நட்சத்திரங்கள் - 1 மதிப்பாய்வின் அடிப்படையில்

தேவையான பொருட்கள்:

கீமா - 100 கிராம்

உருளைக்கிழங்கு - 1

வெங்காயம் - 1

பச்சை மிளகாய் - 2

மட்டன் மசாலா தூள் - 1/2 தேக்கரண்டி

மிளகாய் தூள் - 1/2 தேக்கரண்டி

மஞ்சள் தூள் - 1/4 தேக்கரண்டி

இஞ்சி, பூண்டு விழுது - 1 தேக்கரண்டி

முட்டை - 1

கார்ன் ஃப்ளார் - 1 தேக்கரண்டி

மல்லித் தழை - சிறிது

உப்பு - தேவையான அளவு

எண்ணெய் - தேவையான அளவு

செய்முறை:

வெங்காயம், பச்சை மிளகாய் மற்றும் மல்லித் தழையை நறுக்கி வைக்கவும். உருளைக்கிழங்கை வேகவைத்து மசித்துக் கொள்ளவும்.

கீமாவுடன் வெங்காயம், பச்சை மிளகாய், மல்லித் தழை ஆகியவற்றைச் சேர்க்கவும்.

அதனுடன் இஞ்சி, பூண்டு விழுதையும், தூள் வகைகளையும் சேர்த்து கலந்து கொள்ளவும்.

பிறகு கீமா கலவையுடன் கார்ன் ஃப்ளார், முட்டை, வேகவைத்து மசித்த உருளைக்கிழங்கு (அ) பொட்டேடோ ப்யூரி பவுடர் சேர்த்து ஒன்றாக பிசைந்து கொள்ளவும். (முட்டை சேர்க்க விருப்பம் இல்லையெனில் சிறிது தண்ணீர் சேர்த்து பிசைந்து கொள்ளவும்).

கீமா கலவையை சிறிது சிறிதாக எடுத்து வட்டமாக தட்டி, வாணலியில் எண்ணெயைச் சூடாக்கி அதில் போட்டு பொன்னிறமாக பொரித்தெடுக்கவும்.

குறிப்புகள்: