கிரிஸ்பி சமோசா
தேவையான பொருட்கள்:
சமோசா தாள் (feuille de brick) - 1 பாக்கெட்
மீன் டின் - 1
வெங்காயம் - 1
கேரட் - 2
மல்லி, புதினா - சிறிது
மிளகு தூள் - 1/2 தேக்கரண்டி
முட்டை - 2
பூண்டு தூள் - சிறிது
உப்பு - தேவையான அளவு
செய்முறை:
வெங்காயத்தை பொடியாக நறுக்கிக் கொள்ளவும். கேரட்டை துருவி வைக்கவும். மல்லி, புதினா தழையை கழுவி நறுக்கி வைக்கவும். முட்டைகளை கலக்கி வைக்கவும்.
சமோசா தாள் வட்டமாக இருக்கும், அதை நான்கு சமமான பாகங்களாக வெட்டவும்.
மீன் டின்னில் உள்ள நீரை (அ) எண்ணெயை வடித்து விடவும். வடித்த மீனுடன் பொடியாக நறுக்கின வெங்காயம், மல்லி, புதினா, துருவிய கேரட், உப்பு, மிளகு தூள், பூண்டு தூள் ஆகியவற்றை சேர்த்து கிளறி வைக்கவும்.
நான்கு துண்டுகளாக நறுக்கின சமோசா தாளின் ஒரு பாகத்தை எடுத்து அதன் மேல் முட்டையை தடவவும்.
பிறகு அதன் மேல் செய்து வைத்திருக்கும் மீன் கலவையை வைக்கவும்.
கலவை வைத்த பின்னர் அதன் எல்லா பக்கமும் மூடும்படி மடித்துக் கொள்ளவும்.
மடித்து அவன் ட்ரேயின் மேல் மூடிய பாகம் கீழ் நோக்கி இருக்குமாறு அடுக்கவும். 150° சூட்டில் 20 நிமிடங்கள் வேக விட்டு எடுக்கவும்.
குறிப்புகள்:
சூடாக சாப்பிட நன்றாக இரூக்கும்.
மாலை டிபனுக்கு ஏற்றது.
கொஞ்சம் கூட எண்ணெயே இல்லாத சமோசா ரெடி.