காலிஃப்ளவர் பஜ்ஜி (3)
தேவையான பொருட்கள்:
காலிப்ளவர் (பூக்களாக உதிர்த்தது) - 2 கப்
மிளகாய் தூள் - 1 1/2 தேக்கரண்டி
தனியா தூள் - 1 தேக்கரண்டி
கரம் மசாலா தூள் - 3/4 தேக்கரண்டி
மஞ்சள்தூள் - 2 சிட்டிகை
டொமெட்டோ கெச்சப் - 1/4 கப்
பச்சரிசி மாவு - 1/4 கப்
கடலை மாவு - 1/2 கப்
கார்ன் ப்ளார் - 1 மேசைக்கரண்டி
சோடாமாவு - 2 சிட்டிகை
எண்ணெய் - பொரிக்க தேவையான அளவு
உப்பு - தேவையான அளவு
செய்முறை:
காலிப்ளவரை வெது வெதுப்பான நீரில் போட்டு மஞ்சள்தூள், உப்பு சேர்த்து 10 நிமிடம் அப்படியே வைக்கவும். பின் அலசி எடுக்கவும்.
ஒரு பெரிய பாத்திரத்தில், பச்சரிசிமாவு, கடலை மாவு, கார்ன் ப்ளார் மாவு, சோடாமாவு இவற்றை போடவும்.
பின் தனியா தூள்,மிளகாய்தூள்,கரம்மசாலா தூள், உப்பு, மஞ்சள்தூள், கெச்சப் கலந்து தேவையான நீர் சேர்த்து பஜ்ஜி மாவு பதத்தில் செய்து அதில் காலி ப்ளவரை போடவும். எண்ணையை காயவைத்து அதில் பொரித்து பொரித்து எடுத்து பரிமாறவும்.