காலிஃப்ளவர் பஜ்ஜி
0
தேவையான பொருட்கள்:
காலிஃப்ளவர் - 1
கடலை மாவு - 1 கப்
அரிசி மாவு - 1 தேக்கரண்டி
கார்ன்ஃப்ளார் - 2 தேக்கரண்டி
இஞ்சி, பூண்டு விழுது - 1 தேக்கரண்டி
பெருங்காயத்தூள் - 1/2 தேக்கரண்டி
மிளகாய்தூள் - 1 தேக்கரண்டி
எண்ணெய் - பொரிக்க தேவையான அளவு
உப்பு - தேவையான அளவு
செய்முறை:
மாவுடன் கார்னஃப்ளார், இஞ்சி, பூண்டு விழுது,மிளகாய்தூள்,உப்பு, சிறிதளவு தண்ணீர் சேர்த்து இட்லி மாவைவிட சற்றுக் கெட்டியான பதத்தில் கரைத்துக் கொள்ளுங்கள்.
காலிஃப்ளவரை சிறு துண்டுகளாக்கி, அலசி, உப்பு கலந்த கொதிக்கும் நீரில் இரண்டு நிமிடம் போட்டெடுங்கள்.
எண்ணெயைக் காயவையுங்கள் காலிஃப்ளவரை சிறிது சிறிதாக மாவில் போட்டெடுத்து எண்ணெயில் தூவினாற்போல் போட்டு, பொரித்து எடுத்து பரிமாறவும்.