காலிஃப்ளவர் பகோடா (1)
0
தேவையான பொருட்கள்:
காலிஃப்ளவர் - ஒன்று
கடலைமாவு - 1 1/4 கப்
அரிசிமாவு - 2 கப்
பச்சைமிளகாய் - 3
பெரிய வெங்காயம் - 3
தண்ணீர் - தேவையான அளவு
எண்ணெய் - பொரிக்க தேவையான அளவு
கறிவேப்பிலை - சிறிது
உப்பு - தேவையான அளவு
செய்முறை:
முதலில் காலிஃப்ளவரை கழுவி சுத்தம் செய்து பூக்களை உதிர்த்துக் கொள்ளவும்.
வெங்காயம், பச்சைமிளகாய் பொடியாக நறுக்கவும்.
காலிஃப்ளவர்,வெங்காயம், பச்சைமிளகாய், கடலைமாவு ஒன்றரை கப், அரிசி மாவு உப்பு சேர்த்து ஓரளவு மெதுவாக பிசையவும். பிசைந்த மாவை எண்ணெயில் பக்கோடாக்களாக கிள்ளிப் போட்டு பொரித்து எடுக்கவும். பிறகு கறிவேப்பிலையை எண்ணெயில் பொரித்து எடுத்து தூவி விட்டு பரிமாறவும்.