காலிஃப்ளவர் பகோடா

off off off off off 0

தேவையான பொருட்கள்:

காலிஃப்ளவர் - 1/4 கிலோ

கடலை மாவு - 1/4 கிலோ

சோம்பு - ஒரு சிட்டிகை

பூண்டு - 1

மிளகாய்த் தூள் - தேவையான அளவு

எண்ணெய் - பொரிக்க தேவையான அளவு

உப்பு - தேவையான அளவு

செய்முறை:

காலிஃப்ளவரை வெந்நீரில் நன்றாக வேக வைக்கவேண்டும். பிறகு சிறியதாக நறுக்கி வைத்து கொள்ள வேண்டும்.

கடலை மாவுடன் நறுக்கின காலிஃப்ளவரை கலக்க வேண்டும். பிறகு நறுக்கின பூண்டு, சோம்பு, மிளகாய் தூள், உப்பு ஆகியவற்றை அதில் சேர்த்து கலக்க வேண்டும்.

வாணலியில் எண்ணெய் ஊற்றி சூடானதும், மாவினை கிள்ளிப் போட்டு, பொன்னிறமாக எண்ணெயில் பொரித்து எடுத்து பரிமாறவும்..

குறிப்புகள்: