காலிஃபிளவர் பக்கோடா

off off off off off 0

தேவையான பொருட்கள்:

காலிஃபிளவர் -1

கடலை மாவு -1 கப்

அரிசி மாவு - 2 மேசைக்கரண்டி

மிளகாய்தூள் - 2 மேசைக்கரண்டி

பெருங்காயதூள் - 1/4 தேக்கரண்டி

சமயல்சோடா - 1 சிட்டிகை

சுடு தண்ணீர் - 2 கப்

எண்ணை - பொரிக்க தேவையான அளவு

உப்பு - தேவையான அளவு

செய்முறை:

காலிஃபிளவரை பெரியதுண்டுகளாக நறுக்கிவைக்கவும். சுடுதண்ணீரில் சிறிது உப்பு போட்டு காலிஃபிளவரை போட்டு 2 நிமிடம் மூடிவைக்கவும்.

2 நிமிடம் கழித்து தண்ணீரை வடித்துவைக்கவும்.

ஒரு தட்டில் கடலை மாவு, அரிசி மாவு, மிளகாய்தூள், பெருங்காயதூள், உப்பு, சமயல்சோடா போட்டு நன்கு கலந்துவைக்கவும்.கலந்தமாவுடன் காலிஃபிளவரை போட்டு நன்கு பூவில் மாவு சேரும்படி பிரட்டவும்.

வாணலியில் எண்ணை ஊற்றி காயவைத்து பிரட்டிய காலிஃபிளவரை சிறிது சிறிதாக போட்டு பொரித்து எடுக்கவும்.

குறிப்புகள்:

டீயுடன் காப்பியுடன் சாப்பிட சுவையான பக்கோடா ரெடி.